விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீண்ட இழுபறிக்கு பின்பு ஆளுநர் தவெகவிற்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுதிருப்பதாக வெளியான தகவல் அக்கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
108 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் 5 என 113 எம்எல்ஏக்கள் ஆதரவு தவெகவிற்கு உள்ளது. ஆட்சி அமைக்க ஆதரவு கோரி நேற்றைய தினம் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்து உரிமை கோரி இருந்தார். ஆனால் விஜயை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் தவெக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில், திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க போவதாக தகவல்கள் வெளியானது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் இறுதிகட்டத்தை எட்டி இருப்பதாகவும் தகவல்கள் பரவின. அதிமுக பதவி ஏற்க வைக்க பாஜக விரும்புவதாகவும், அதற்காகவவும் தவெகவிற்கு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், 2-வது முறையாக ஆளுநரை சந்திக்க தவெக தலைவர் விஜய் இன்று கிண்டி மக்கள் பவனுக்கு சென்றார். அப்போது அவரது கார் தவிர வேறு கார்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஆளுநர் சந்திக்க விஜய் நீண்ட நேரம் காத்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. சுமார் 30 நிமிடம் காத்திருப்புக்கு பிறகே ஆளுநர் விஜய் சந்திப்பு நடந்தது.
அப்போது ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு விஜய் ஆளுநரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. ஆட்சி அமைத்தவுடன் பெருபான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் விஜய் ஆளுநரிடம் அப்போது தெரிவித்து உள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தாகவும், அதிகாரப்பூர்வமாக அழைப்பு சற்று நேரத்தில் வெளியாகும் எனவும் மக்கள் பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஆட்சி அமைத்தால் இடையிலேயே கவிழாது என உறுதி அளிக்க முடியுமா என ஆளுநர் தரப்பில் விஜய்யிடம் கேட்டதாக கூறப்படுகிறது. ஒரு வேளை விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தை நாட தவெக சட்ட ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ். ஆர். பொம்மை தொடர்ந்த வழக்கில், மக்களின் ஆதரவு மற்றும் பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்தால் போதும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முன்னுதாரணமாக வைக்க தவெக திட்டமிட்டுள்ளது.

LIVE 24 X 7