தமிழக முதலமைச்சரும் த.வெ.க தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு, இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கடந்த சில காலமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த அவர், விவாகரத்துடன் தனது வாழ்வாதாரத்திற்குத் தகுந்த ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரை இல்லத்தில் வசிப்பதற்கான உரிமை ஆகியவற்றைக் கோரியிருந்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணை கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெற்ற போது இரு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகினர்.
வீடியோ கான்பரன்சிங் கோரிக்கை
விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால், அவர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வருவதில் உள்ள பாதுகாப்புச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, வீடியோ கான்பரன்சிங் (காணொளி காட்சி) மூலம் ஆஜராக அனுமதிக்குமாறு இருதரப்பு வக்கீல்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 15-ஆம் தேதியான இன்றைக்கு ஒத்திவைத்திருந்தது.
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு
விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால், அவர் நேரில் ஆஜராவாரா அல்லது காணொளி மூலம் பங்கேற்பாரா என்ற பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், இருவருக்குள்ளும் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இன்றைய நீதிமன்ற விசாரணை அரசியல் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் உற்று நோக்கப்பட்டு வருகிறது.

LIVE 24 X 7