தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ.35 கோடி குதிரை பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தனக்கு ரூ.35 கோடி சன்மானம் தருவதாகச் சிலர் பேரம் பேசியதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், யூ-டியூபர் திருநாவுக்கரசு உட்பட 8 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகுமாறு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இருவரும் ஆஜராகவில்லை.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தற்பொழுது செந்தில் பாலாஜியும் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில், "இந்த வழக்கு முற்றிலும் அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது; குதிரை பேரத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மேலும், இந்த வழக்கில் தன் பெயர் குற்றவாளியாகச் சேர்க்கப்படாத நிலையிலும், போலீசார் தன்னை கைது செய்யக்கூடும் என்ற அச்சம் இருப்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LIVE 24 X 7