பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் வாங்க சொல்லி கொலை மிரட்டல்.. இளம்பெண் புகார்..
பெண் வன்கொடுமை வழக்கில் முன்ஜாமீன் பெற்றவர் புகாரை வாபஸ் வாங்க சொல்லி கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பெண் வன்கொடுமை வழக்கில் முன்ஜாமீன் பெற்றவர் புகாரை வாபஸ் வாங்க சொல்லி கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
7 மாதமாக ஒரு இடத்திலும் பணிகள் நடைபெறவில்லை என்று அதிகாரிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதுவரை பெறப்பட்ட புகார்கள், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பட்டியல் தயார் செய்து வழங்க அதிகாரிகளை அமைச்சர்கள் அறிவுறுத்தினார்கள்.
பொன்னியின் செல்வன் பாகம்1 திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்ததை அடுத்து, அதில் நடித்த நடிகர்களான விக்ரம் மற்றும் சரத்குமார் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
''இந்திய அணிக்கு பல ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டன் தோனி தான். அவரது தனித்துவமான தலைமைப் பண்பை உலகமே பாராட்டி வருகிறது. ஆனால் தோனி மீதுள்ள தனிப்பட்ட வன்மம் காரணமாக, அவரை தினேஷ் கார்த்திக் தனது ஆல்டைம் லெவனில் சேர்க்கவில்லை'' என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக காவல்துறையில் காவலர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும் காவலர்களுக்காக கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற காவலர் வேதனையோடு வீடியோ வெளியிட்டுள்ளார்.
தலைநகர் டெல்லியில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கவலை தெரிவித்தார். ''வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியர்களும் கவலைப்படுகின்றனர்'' என்று மோடி கூறியிருந்தார்.
சூர்யா தற்போது நடித்துவரும் படப்பிடிப்பில் அனுமதியின்றி ரஷ்யா மற்றும் ஆப்கன் நாட்டவர்களை பங்கேற்க செய்தது தெரியவந்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
''மேற்கு வங்க மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து கனிமொழி ஒரு ட்வீட் கூட போடவில்லை. முதல்வர் ஸ்டாலின் ஒரு வார்த்தை கூட திறக்கவில்லை. ராகுல் காந்தி இதுவரை வாய் திறக்காதது ஏன்? மமதா ஆட்சியில் தவறு நடக்கிறது எனக்கூற ராகுல் காந்தி ஏன் அஞ்சுகிறார்?'' என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
AR Rahman Awards Record in National Award Winner 2022 : இசைமைப்பாளராக 7-வது முறை தேசிய விருது வென்றுள்ளார் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். இதன்மூலம் அதிக தேசிய விருதுகள் வென்ற இசையமைப்பாளர் என்ற சாதனையை அவர் தக்க வைத்துள்ளார்.
பிரபல ரவுடி ரோஹித் ராஜை கடந்த 13ஆம் தேதி சுட்டு பிடித்த பெண் காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி மீது தாக்குதல் நடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.