K U M U D A M   N E W S

கோவை மாசாணி அம்மன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு கோவை ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பக்தர்களின் வருகை அதிகரித்ததை அடுத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

மிக்ஜாம் புயல் காரணமாக சேதமடைந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கரைகளை சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.22 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு

அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து சான்றளிக்க வல்லுநர்களை நியமிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கனமழை எதிரொலி.. திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு... மூழ்கிய தரைப்பாலத்தால் மக்கள் அவதி

திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் மங்கலம் - கல்லூரி சாலையை இணைக்கும் தரைப்பாலம் மூழ்கியது. இதையடுத்து தரைப்பாலத்தை பொதுமக்கள் கடக்காமல் இருக்க இரும்பு வேலிகள் அமைத்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Brother VS Bloody Beggar: நெகட்டிவ் விமர்சனம்... பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றம் கொடுத்த பிரதர், ப்ளடி பெக்கர்

ஜெயம் ரவியின் ப்ரதர், கவின் நடிப்பில் வெளியான ப்ளடி பெக்கர் படங்கள், தீபாவளி ஸ்பெஷலாக நேற்று வெளியாகின. இந்தப் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் பற்றி இப்போது பார்க்கலாம்.

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை... சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையையொட்டி குற்றாலம்  சென்ற சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

அமாவாசை வழிபாடு.. சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள்

ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையையொட்டி சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர். வழியில் உள்ள நீரோடைகளில் குளிக்கவும், இரவில் கோயிலில் தங்கவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தமிழ்நாடு நாளை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ‘தமிழ்நாடு நாள்’ என அறிவிக்கப்பட்ட நாள் இன்று; தமிழ்நாடு உருவாகக் காரணமாக இருந்த அனைத்து தியாக உள்ளங்களையும் இந்நன்னாளில் போற்றுவோம் என தெரிவித்துள்ளார். 

Lucky Baskhar BoxOffice: துல்கர் சல்மான் காட்டுல வசூல் மழை... லக்கி பாஸ்கர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியானது. இந்தப் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் குறித்து இப்போது பார்க்கலாம்.

தியாகிகளை போற்றி வணங்குகிறேன்.. முதலமைச்சர்

தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள் இன்று. போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு