தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறமையால் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்த கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேரில் சென்று பாக்யராஜின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார்.
தந்தையை இழந்த துயரத்தில் கண்ணீர் மல்க இருந்த மகன் சாந்தனுவை முதல்வர் விஜய் ஆரத்தழுவி ஆறுதல் கூறிய காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. அருகில் அமர்ந்து கதறி அழுதுகொண்டிருந்த மனைவி பூர்ணிமா மற்றும் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர்கள் ரஜினிகாந்த், தியாகராஜன், பிரசாந்த், சின்னி ஜெயந்த், சார்லி உள்ளிட்ட பலரும், அரசியல் தலைவர்களான திருநாவுக்கரசர், தொல். திருமாவளவன், வி.கே. சசிகலா உள்ளிட்டோரும் நுங்கம்பாக்கம் இல்லத்திற்கு நேரில் வந்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, முதல்வர் விஜய் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், "தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே. பாக்யராஜ் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளித்துள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கே. பாக்யராஜின் திரைத்துறைப் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
நேரலையில் பார்க்க

LIVE 24 X 7