சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 பாகத்தின் முக்கிய அப்டேட் இன்று மலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரில், மைக் ஏந்திய கை மற்றும் பிரமாதம் (‘superb') சைகையுடன் உயர்த்தப்பட்ட கை இடம்பெற்றுள்ளன. அதில் ‘6 PM Today’ என குறிப்பிடப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகும் ‘ஜெயிலர் 2’ மீது ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் வெளியீடு அக்டோபர் 15-ம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வெளியாகவுள்ள புதிய அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாலை 6 மணிக்கு வெளியாகி உள்ள அப்டேட்டில் படத்தின் முதல் பாடலுக்கான அறிவிப்பாக இருக்கலாம் என சினிமா ஆர்வலர்கள் சமூக வலைத்தளத்தில் எதிர்பார்ப்பை கிளப்பிவருகின்றனர்.
பொதுவாகவே சூப்பர்ஸ்டாரின் தீவிர ரசிகர்தான் அனிருத், இவர்கள் கூட்டணியில் இதுவரை வந்த பாடல்கள் அனைத்தும் ஹிட்தான். இன்று வெளியாக இருக்கும் அப்டேட் மட்டும் முதல் சிங்கள் பாடலுக்கான அறிவிப்பாய் இருந்தால் அனிருத்தின் ஹிட் வரிசையில் நிச்சயம் தலைவருக்கான பாடலும் இடம்பெரும் என ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.
இன்று மாலை 6 மணிக்கு, தலைவரின் ரசிகர்களுக்கு நல்ல எண்டெர்டைன்மெண்ட் காத்திருப்பதாக சினிமா ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

LIVE 24 X 7