OM MOVIE: மம்மூட்டி, சாய் பல்லவி என எல்லோர்க்கும் INTRO வீடியோ! INTRO இல்லாமலே ஸ்ரீலீலாவின் போஸ்டர் OUT!

OM MOVIE: மம்மூட்டி, சாய் பல்லவி என எல்லோர்க்கும் INTRO வீடியோ! INTRO இல்லாமலே ஸ்ரீலீலாவின் போஸ்டர் OUT!

தனுஷின் ‘ஓம்’ படத்தில் ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அரசு பேருந்துகளில் வெளியான அவரது போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author: Santhosh சினிமா

நடிகர் தனுஷ் நடித்த ஓம் திரைப்படம், நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தில் மலையாள முன்னணி மூத்த நடிகர் மம்மூட்டி , நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. சாய் அபயங்க்கர் இசையமைக்கும் இந்த படத்தில் முதலில் படத்தின் 1st சிங்கள் வெளிவந்தது, அடுத்தது மம்மூட்டியின் அறிமுக வீடியோ மற்றும் சமீபத்தில் சாய் பல்லவியின் அறிமுக வீடியோ என அப்டேட்களை படக்குழு வெளியிட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து, வரும் நவம்பர் 6-ம் தேதி படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடைபெறுவதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆடியோ லான்ச்க்கு முன்னதாகவே படத்தின் போஸ்டர்களில் தமிழ்நாடு முழுவதும் முழு வீச்சில் ப்ரோமோஷன் பணியில் இறங்கிவிட்டனர்.

அப்படியிருக்கையில், படத்தின் முன்னணி நடிகர்களுக்கு தனித்தனியே அறிமுக வீடியோ வெளியிட்ட படக்குழு நடிகை ஸ்ரீலீலா கதாபாத்திரம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில், படக்குழு அதிகாரபூர்வமாக அறிமுக வீடியோவுடன் ஸ்ரீலீலா கதாபாத்திரத்தை வெளியிடுவார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில், சத்தமே இல்லாமல் ப்ரோமோஷன் குழு ஒரு காரியம் செய்துவிட்டது.

நடிகை ஸ்ரீலீலாவின் கதாபாத்திரத்தை போஸ்டர் ப்ரோமோஷன் மூலமாக தமிழ்நாடு அரசு பேருந்துகளில் வெளியிட்டுள்ளனர். அந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன. அதில் ஸ்ரீலீலா காட்டன் புடவையில் நெற்றியில் சிறிய திருநீறுடன் கைகளை கட்டி பார்ப்பது போன்று போஸ் கொடுத்திருக்கிறார். இந்த போட்டோவைக் கண்டு சமூக வலைத்தளங்களில் பலரும் ஸ்ரீலீலா டீச்சர் கதாபாத்திரத்திலோ அல்லது எதாவது கல்வி சம்மந்தப்பட்ட கதாபாத்திரத்தில் அல்லது அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் கதாபாத்திரமாக இருக்கக்கூடும் என்று டீகோட் செய்து வருகின்றனர்.



அதேவேளையில், இவர் தனுசுக்கு ஜோடியாக இருப்பார் என்றும் ரசிகர்கள் கணித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்கையில், தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் உடன் நடித்திருக்கும் நடிகை மற்றும் தமிழிலும் ஒரு பெரிய படம் நடித்திருக்கும் கதாநாயகியின் அறிமுகத்தை இப்படியா எந்த ஒரு ஸ்பெஷல் இன்ட்ரோ வீடியோ இல்லாமல் அரசு பேருந்துகளில் வெளியிடுவதா என ஸ்ரீலீலா ரசிகர்கள் கமெண்டடித்து அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

ஓம் படத்தின் ஆடியோ லாஞ்சிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே அதிகாரபூர்வமாக ஸ்ரீலீலாவின் கதாபாத்திரத்தை படக்குழு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மற்றொரு கோணத்தில் இந்த புது விதமான ப்ரோமோஷன்கள் மக்களிடம் நேராக சென்றடையும் என்று படக்குழு நம்புவதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்துவருகின்றனர்.

இதுபோன்ற புதுவிதமான ப்ரோமோஷன் யுக்திகள் அனைத்தும் பயனளிக்குமா இல்லை ஏதேனும் சறுக்கல்களை சந்திக்குமா என்று படம் வந்தபின் மக்களிடம் இருந்து வரும் கருத்துகளிலேயே உள்ளது. அதற்கு ஈடாக அரசியலில் பிரவேசிக்கப்போவதாக தனுஷ் மீது விழுந்துள்ள எதிர்பார்ப்புகளால் வரும் நவம்பர் 6-ம் தேதி ஆடியோ லாஞ்சில் என்ன பேசப்போகிறார், அரசியல் சாயல் தென்படுமா என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.