தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வார இறுதி செம விருந்தாக அமையப்போகிறது. காதல், காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ், த்ரில்லர் என வெவ்வேறு ஜானர்களில் உருவாகியுள்ள 4 திரைப்படங்கள் நாளை ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இதனால் எந்தப் படம் ரசிகர்களை அதிகம் கவரும், வசூல் ரீதியாக எந்தப் படம் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக ‘ஹாய்’, ‘ஒன்ஸ் மோர்’, ‘கராத்தே பாபு’, ‘அமரம்’ ஆகிய நான்கு படங்களும் வெவ்வேறு கதைக்களத்தைக் கொண்டிருப்பதால், அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இந்த வார இறுதியில் தேர்வு செய்ய பல ஆப்ஷன்கள் கிடைத்துள்ளன.
ஹாய்! – கவின், நயன்தாரா:
கவின் மற்றும் நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஹாய்’. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படம் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஃபீல்-குட் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.
ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக வரும் காதலும், அவனது எண்ணங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட குணம் கொண்ட பெண்ணுடன் உருவாகும் உறவும் கதையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. காதல், காமெடி மற்றும் குடும்ப உணர்வுகளை கலந்து உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளன.
ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளதால் பாடல்களுக்கும் படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கவின்–நயன்தாரா கூட்டணி திரையில் எப்படி இருக்கப்போகிறது என்பதையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஒன்ஸ் மோர் – அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர்:
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். இப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதுவரை பெரும்பாலும் அழுத்தமான மற்றும் தீவிரமான கதாபாத்திரங்களில் ரசிகர்களைக் கவர்ந்த அர்ஜுன் தாஸ், இந்தப் படத்தில் காதல் நாயகனாக புதிய பரிமாணத்தில் தோன்றுகிறார்.
காதலில் ஏற்படும் ஏமாற்றம், மனக்காயம், பிரிவு மற்றும் வாழ்க்கை மீண்டும் வழங்கும் இரண்டாவது காதல் வாய்ப்பு ஆகியவற்றை மையமாக வைத்து கதை நகர்கிறது. அதிதி சங்கருடன் அர்ஜுன் தாஸின் கெமிஸ்ட்ரியும் படத்தின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உள்ளது.
ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், காதல் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ‘ஒன்ஸ் மோர்’ எந்த அளவுக்கு ஈர்க்கும் என்பது நாளை தெரியவரும்.
கராத்தே பாபு – ரவி மோகன், தவ்தி ஜிவால்:
மாஸ் ஆக்ஷன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திரைப்படம் ‘கராத்தே பாபு’. ‘டாடா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரவி மோகன் மற்றும் தவ்தி ஜிவால் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அரசியல் பின்னணி, சதித்திட்டம், பழிவாங்குதல் மற்றும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் ரவி மோகனின் ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கிரீன் சீன் மீடியா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். குறிப்பாக பின்னணி இசை மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற மூன்று படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஆக்ஷன் ஜானரில் இப்படம் வெளியாக இருப்பதால், ஓப்பனிங் வசூலில் ‘கராத்தே பாபு’ எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
இதில் என்ன சோகம் என்றால், இந்த படத்திற்கான கடைசி அப்டேட்கள் 7 மாதங்களுக்கு முன் படத்தின் டீசரும், 2 மாதங்களுக்கு முன் படத்தின் முதல் சிங்கள் வெளியிட்டது. அதன்பிறகு ட்ரைலர் கூட வெளியிடாமல் படத்தின் ரிலீஸ் தேதியை கடந்த மதம் ஜூன் 26-ம் தேதி வெளியிட்டது.
பெரிதளவில் ப்ரோமோஷன் செய்யாமல் ரவி மோகனின் படம் வருவது சமீப காலத்தில் இதுவே முதல் முறை என்றும், இதற்கு கரணம் படத்தின் கரு முன்னாள் அமைச்சர் திமுக எம்.எல்.ஏ சேகர் பாபு வாழ்கை கதை என்பதால் ஆளுங்கட்சியின் நெருக்கடியால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று ஒரு பக்கமும், ரவி மோகன் அவரது மனைவியுடனான பிரச்சனைகள் முடியும் வரை எனது படங்கள் திரையரங்கில் வெளியிடப்படாது என்று பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கூறியதாகவும், தயாரிப்பாளர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் ரவி மோகனிடம் கருது வேறுபாடு ஏற்பட்டு இந்த முடிவை எடுத்ததாகவும் சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அமரம் – தேஜேஷ் ராஜன், இரா அகர்வால்:
ஆக்ஷன், ரொமான்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள ‘அமரம்’ நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. திருஅருள் கிருஷ்ணன் இயக்கத்தில் தேஜேஷ் ராஜன் மற்றும் இரா அகர்வால் இணைந்து நடித்துள்ளனர்.
காதலைச் சுற்றி எதிர்பாராத ஆபத்துகள் உருவாக, அதிலிருந்து நாயகன் எப்படி தப்பித்து தனது காதலை காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. சஸ்பென்ஸ் மற்றும் திருப்பங்களுடன் நகரும் திரைக்கதை ரசிகர்களை இறுதி வரை கட்டிப்போடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சாய்தீனா மற்றும் ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிக்கி மேயர் இசையமைத்துள்ள இப்படம் ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் விரும்பிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
பாக்ஸ் ஆபீஸில் யார் கில்லாடி?
ஒரே நாளில் நான்கு திரைப்படங்கள் வெளியாவதால் இந்த வார இறுதியில் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் கடும் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது.
‘ஹாய்' – காதல் மற்றும் குடும்ப ரசிகர்களை குறிவைக்கிறது.
‘ஒன்ஸ் மோர்’ – இளைஞர்களை கவரும் காதல் கதையுடன் வருகிறது.
‘கராத்தே பாபு’ – மாஸ் மற்றும் ஆக்ஷன் ரசிகர்களை எதிர்பார்க்கிறது.
‘அமரம்’ – சஸ்பென்ஸ், ரொமான்ஸ் மற்றும் த்ரில்லர் ரசிகர்களை குறிவைக்கிறது.
இதனால் நான்கு படங்களுக்கும் தனித்தனி ரசிகர் வட்டம் உருவாகும் வாய்ப்பு உள்ளது. முதல் நாள் வசூல், ரசிகர்களின் வரவேற்பு, திரையரங்கு காட்சிகளின் எண்ணிக்கை என பல காரணிகள் இந்தப் போட்டியில் முக்கிய பங்கு வகிக்க உள்ளன.
மொத்தத்தில், நாளை முதல் திரையரங்குகளில் நான்கு படங்களும் களமிறங்குவதால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வார இறுதி ‘சினிமா கொண்டாட்ட வார இறுதி’யாக மாறப்போகிறது. இந்த நான்கு படங்களில் ரசிகர்களின் மனதை வென்று, பாக்ஸ் ஆபீஸ் ரேஸில் முதலிடத்தைப் பிடிக்கப் போவது யார் என்பதற்கு இன்னும் சில நாட்களில் விடை கிடைத்துவிடும்.

LIVE 24 X 7