ஆன்மிகம்

பக்தரைத் தேடிவந்து அருளும் பகவான்..!

காஞ்சிபுரத்திலிருந்து பவளவண்ணர் தன் பக்தருக்காகத் தேடிவந்து அருளிய இத்தலத்தில், பெருமாளின் திருவடியைப் பற்றிக்கொண்டால் நவகிரக தோஷங்கள் நீங்கி, தீராத வினைகள் அனைத்தும் தீரும் என்பது ஆன்மீக நம்பிக்கையாகும்.

பக்தரைத் தேடிவந்து அருளும் பகவான்..!
Perumal
நீங்கள் பத்திரமாக இருக்கவேண்டுமா? உங்களுடைய கர்மாக்கள் எல்லாம் நீங்கி, நல்லவை நடக்க வேண்டுமா? அப்படியானால் நீங்கள் இறுகப் பற்றிக்கொள்ளவேண்டியது எதைத் தெரியுமா? பகவானின் காலடியை.

பற்றுக பற்றற்றான் பற்றினை என்று திருவள்ளுவரும் இதைத்தான் சொல்கிறார். இப்படித் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வரம் தருவதற்காகவே பெருமாள் காத்திருக்கும் தலம் எது தெரியுமா? காலடிப் பேட்டை. ஆஹா... என்ன ஒரு அருமையான பெயர். தலத்தின் பெயரைச் சொல்லும்போதே எம்பெருமாளின் திருவடி நினைவுக்கு வருகிறது அல்லவா?

இந்தப் பெயருக்குக் காரணமாக வரலாற்று சம்பவம் ஒன்றைச் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு என்னவோ பெருமாள் தன் திருவடியை பக்தன் நினைக்கவேண்டும் என்பதற்காகவே இப்படி அமையச் செய்திருப்பார் என்றே தோன்றுகிறது.

கல்யாணவரதராஜராக, பெருந்தேவி தாயாருடன் எம்பெருமான் சேவை சாதிக்கும் இத்தலத்தின் பெயருக்கு வரலாறு சொல்லும் சம்பவத்தை முதலில் பார்த்துவிடுவோம்.

துபாஷ்.. சபாஷ்!

ஆங்கிலேய அரசு ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டம். தமிழறியா அவர்களுக்கு ஆங்கிலமும் தமிழும் அறிந்தவர்களின் தயவு தேவைப்பட்டது. அத்தகைய வல்லவர்களைத் தங்கள் அந்தரங்க காரியதரிசிகளாக ஆக்கிக் கொண்டார்கள் ஆங்கிலேயர்கள். அந்தவகையில் கெல்லட் துரை என்ற அதிகாரியின் அந்தரங்க காரியதரிசியாக இருந்தவர், வீரராகவாசாரியார். பிரிட்டிஷாரிடம் பணி புரிந்தாலும் எந்த நேரமும் எம்பெருமான் சேவையையே சுடமையாக நினைத்த பெரும் பக்தர். இரு பாஷை அறிந்த அவரை துவிபாஷி என்று அழைத்தார்கள். பேச்சுவழக்கில் துபாஷ் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து காஞ்சிக்குப் புறப்பட்டுவிடுவார், துபாஷ் வீரராகவாசாரியார். நேராக வரதராஜர் கோயிலுக்குச் செல்வார். எத்தனை நேரம் தன்னை மறந்து எம்பெருமானை வணங்குவாரோ தெரியாது. ஒருவழியாக இன்றைக்கு இது போதும் என்று தீர்மானித்து அங்கே இருந்து புறப்படுவார்.

சென்னப்பட்டணம் வந்து சேர்ந்ததும், அலுவலகப் பணிகளில் மூழ்கிவிடுவார். தினம் தினம் இப்படியே நகர்ந்தாலும் ஒருநாளும் தனது பணிகள் எதிலும் தொய்வு விழ விட்டதில்லை அவர். அவரது இந்தச் செயல்களைத் தொடர்ந்து கவனித்து வந்த கெல்லட்டுக்கு ஆச்சரியம் எப்படி இத்தனை சுறுசுறுப்பாகச் செயல்படமுடிகிறது? என்று வியந்தவர், துபாஷிடமே கேட்டார். "எல்லாம் வரதராஜரின் அருள்! துபாஷ் சொல்ல "சபாஷ்!" சொன்னார் கில்லட்

காலடிப் பேட்டை

காலம் நகர்ந்தது. வீரராகவாசாரியாரின் வயதும் கூடியது. ஆனாலும் காஞ்சிக்கு செல்வதைத் தொடர்ந்தார். காரியதரிசி பணியையும் தொடர்ந்தார்.

பார்த்தார், கெல்லட் 'இத்துணை தொலைவு சென்று வரதரை சேவிக்க வேண்டுமா? நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்கள் வரதருக்கு ஒரு கோயில் கட்டிக்கொள்ள அனுமதிக்கிறேன். கட்டிக்கொண்டு இங்கேயே தரிசியுங்களேன். அலைச்சல் இருக்காது" சொன்னார்.

வீரராகவாசாரியாருக்கு ஆனந்தம். காரணம் அலையவேண்டாம் என்பதால் அல்ல. அலைமகள் நாதனே தேடிவந்து தான் இருக்கும் பகுதியில் கோயில் கொள்ளப்போகிறான் என்பதுதான். சுறுசுறுப்புக்குப் பெயர்போன அவர் நம்மா இருப்பாரா? உடனடியாக தன் ஊரில் உள்ள பத்மபுரம் என்ற தலத்தைத் தேர்ந்தெடுத்தார். செல்லட்டிடம் சொன்னார். அவர் ஓகே சொல்ல, ஜரூராக ஆரம்பித்தது கோயில்பணி.

விரைவில் திருக்கோயில் கட்டி முடிக்கப்பட்டு, காஞ்சி வரதரைப் போலவே இங்கே கல்யாணவரதர் எழுந்தருளச் செய்யப்பட மகிழ்ந்தார் பக்தர். காலை, மாலை, மதியம் என்று எந்தப் பாகுபாடும் இன்றி நினைத்தபோதெல்லாம் கோயிலுக்குச் சென்றார், கும்பிட்டார்.

பவளவாய் கமலச் செங்கண்

எல்லாம் கொஞ்சம் நாள்தான் நடந்தது.எதனாலோ, கல்யாணவரதரை விட்டுவிட்டு மீண்டும் பழையபடி காஞ்சிபுரத்துக்குச் செல்லத் தொடங்கினார் துபாஷ். காரியதரிசியின் இந்தக் காரியத்துக்கு காரணம் தெரியாமல், குழம்பினார் கெல்வட். ஒரு நாள், அவரிடமே கேட்டார்.

"காஞ்சி வரதராஜர் கோயிலில் இருக்கும் உற்சவர் பவளவண்ணர் என் உள்ளத்தில் நிறைந்திருக்கிறார். பவளவாய் சுமலச் செங்கண்ணனான அவரது பேரழகினைக் கண்ட எனக்கு வேறொன்றை எண்ணவும் தோன்றவில்லை" என்றார், வீரராகவாசாரியார்.

ஆள்பவர்கள் நினைத்தால், ஆண்ட வளைக்கூட மாற்றமுடியும் அல்லவா? அதுதான் நடந்தது. தன் காரியதரிசிக்காக கடவுளையே காஞ்சியில் இருந்து கொண்டுவரச் செய்தார், கெல்லட்.

காஞ்சியில் இருந்த பவளவண்ணர், பத்மபுரத்து பக்தருக்காக கல்யாண வரதராஜரின் கோயிலில் உற்சவராகக் கொண்டுவந்து வைக்கப் பட்டார், ஆராதிக்கப்பட்டார்.

அகம் மகிழ்ந்துபோனார், துவிபாஷி தன் மனம் குளிரச் செய்த செல்லட் துரைக்கு நன்றி சொல்லும்விதமாக பத்மபுரத்தின் பெயரை கெல்லட் பேட்டை என்றும் அழைக்கும்படி பக்தர்களிடம் சொன்னார். கெல்வட் பேட்டை மருவி, காலாட் பேட்டை ஆனது. அதுவும் பேச்சுவழக்கில் காலடிப்பேட்டையாகிவிட்டது.

ஊரியும் சிவனும்

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? எங்கெல்லாம் சிவபெருமான் கோயில் கொள்கிறாரோ அங்கேயெல்லாம் திருமாலும் ஓடிவந்துவிடுவார். அப்படித்தான், முக்கண்ணன் திருவொற்றியூரில் புற்றிடம் கொண்டபோதே முரளீதரனும் இங்கே வரவேண்டும் கோயில்கொள்ளவேண்டும் எனத் தீர்மானித்திருப்பார்.

அதற்காக அவர் நடத்திய நாடகம்தான், இங்கே கோயில்கட்ட கெல்லட் இடம் தந்தது. அவன் பெயரால் அமைவதுபோல் அமைந்து பின்னர் திருமாலின் திருவடிகளை நினைவூட்டுவதுபோல் ஊரின் பெயர் காலடிப்பேட்டை என்றானது எல்லாம். இதெல்லாம் தேவரகசியம் ஊஹூம், தேவாதி தேவனின் ரகசியம் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இல்லையென்றால், காஞ்சிபுரத்தில் இருந்த பவளவண்ணரை இங்கே கொண்டுவருவது, இங்கே பத்மபுரத்தில் இருந்த உற்சவர்களை அங்கேகொண்டு வைப்பது எல்லாம் சாத்தியமா என்ன?

கோயிலுக்குப் போவோம்

எழிலான ஐந்துநிலை கோபுரம் கம்பீரமாக நிற்கிறது. முன்னால் இருக்கும் மண்டபத்தைக் கடந்து கோபுர வாசல்வழியே உள்ளே சென்றால், கொடிமரம் பலிபீடத்தினை அடுத்து பெரிய திருவடியான கருடாழ்வார், பெருமானைத் தாங்கிச் செல்லத் தயாராக அவரையே நோக்கியவண்ணம் எழுந்தருளியுள்ளார்.

மூலஸ்தானத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, நெடுமாலாக ஆம் கம்பிரமான மூர்த்தியாக சேவைசாதிக்கிறார் கல்யாண வரதராஜ பெருமாள். இருதேலி அருகிருக்க திருமகள் நாதனை தரிசிக்கும்போது. திருப்பதி பெருமான் நினைவுக்கு வந்து போகிறார். அத்துணை உயரம், கம்பிரம், ஆகிருதி. அதோடு கருணையும் நிறைந் திருக்கிறது.

அவரது திருவடியில் உற்சவபேரர் செல்வர் இருக்க அருகே கையில் செண்டுடன் ஆண்டாள் உற்சவத்திருமேனியாக அருள்கிறான். பக்கத்தில் பவளவண்ணரும் உண்டு.

பெருமாளுக்கு வலதுபுறம் உள்ள தனி சன்னதியில் பெருத்தேலி தாயார், கருணை மணக்க கோயில்கொண்டிருக்கிறார். தாயாரின் சன்னதியில் நிற்கும்போது. கோயிலுக்கு எதிரே அலைமோதும் கடலின் காற்று, பல தடைகளைத் தாண்டிவந்து நம்மை ஆரத்தழுவுகிறது. இங்கே இருப்பவள் அலைமகள் என்பதை உணர்த்தி அவளை வழிபடுவோர் வேறு எங்கும் எதற்காகவும் அலையத் தேவையில்லை என்பதையும் புரியவைக்கிறது. உற்சவர் தாயாரும் இருக்கிறார்.

ஆழ்வார்கள் சன்னதி ஆண்டாள், அனுமன். ஸ்ரீராமர், சக்கரத்தாழ்வார் சன்னதிகளும் இருக்கின்றன. பொதுவாக வைணவத்தலங்களில் நவகிர ஹங்களுக்கு தனி சன்னதி இருக்காது. ஆனால் இங்கே விசேஷமாக நவகிரஹ சன்னதி இருக்கிறது. ஏன் இப்படி? கொஞ்சம் யோசித்தால் ஒரு விஷயம் புரிகிறது. பெருமாளின் திருவடிக்குக் கீழேதானே நவகிரஹங்கள் இருப்பதாகச் சொல்வார்கள். இதுவோ காவடி. அதாவது, பெருமாளின் திருவடியையே தன் பெயராசுக்கொண்ட ஊர். அப்படியானால் இங்கேதானே நவகிரஹங்கள் இருக்கும்.

இது உண்மைதான் என்பதை உணர்த்தும் வகையில் இன்னொரு விஷயத்தையும் நவகிரஹ சன்னதியில் பார்க்க முடிகிறது. அது, வேறு எங்கேயும் இல்லாத வகையில் (சிவன்கோயில்களில் கூட இப்படி இல்லை என்று நினைக்கிறேன்) தாமரை வடிவில் அமைந்த பிடத்தின் மீது நவகிரஹங்கள் இருப்பதுதான். பெருமாளின் திருவடிகளைத் தூங்கியவண்ணம் கீழே இருப்பது நாமரைதானே! அந்தத் தாமரையில்தான் நவகிரஹங்கள் தஞ்ச அடைந்திருக்கின்றன.

விஸ்தாரமாக அமைந்திருக்குட இந்தக் கோயிலில் விசேஷங்களுக்குட பஞ்சமில்லை. சித்திரை வருடப்பிறப்பு உற்சவம், உடையவர் உற்சவம் வைகாசியில் பிரமோற்சவம் ஆனியில் வசந்த உற்சவம், ஆடியில் ஆடிப்பூரம், ஆவணியில் கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசியில் நவராத்திரி ஐப்பசியில் தீபாவளி, கார்த்திகையில் தீபோற்சவம் மார்கழியில் தனுர்மாத பூஜை வைகுண்ட ஏகாதசி தையில் மகரசங்கராந்தி, மாசியில் மாசிமகம் பங்குனியில் ஸ்ரீராமநவமி இப்படி வருடம் முழுக்க திருவிழாக்கள்தான், விசேஷம்தான்.

திருப்பதியில் நடப்பது போலவே இங்கேயும் தினமும் அதிகாலையில் கோமாதாபூஜையுடன் விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. சனிக்கிழமைகளில் பெருமாளுக்கும் தாயாருக்கும் புஷ்ப அலங்காரம் ஆராதனைகள் நடக்கின்றன.

கோயிலுக்கு உள்ளேயே திருக்குளம். இந்தக் கோடையிலும் கொஞ்சம் தீருடன் காட்சியளிக்கிறது.
இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் சிறப்பாகப் பராமரிக்கப்படும் இந்தக் கோயிலில், வைகாசியில் நடக்கும் பிரமோற்சவம் ரொம்பவே விசேஷம் சுற்றுவட்டார மக்கள், 'இது எங்க ஊரு சுவாமிக்கு நாங்க நடத்தற விசேஷம்' என்று போட்டிபோட்டுக்கொண்டு பங்கேற்கிறார்கள். தினம்தினம் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

ஊரே திரண்டு கொண்டாடும் அந்தத் திருவிழாவில் சுரு சேவை நடந்த நாளில்தான், மூலவர் சன்னதி, பெருந்தேவிதாயார் சன்னதிகளில் பூஜை செய்யப்பட்ட பிறகு கருடவாகனத்தில் எழுந்தருளிய எம்பெருமானின் திருவடியில் வைத்து, குமுதம் பந்தியின் வாசகர்களான உங்கள்பெயரால், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஆரோக்யத்துடனும் திண்ட ஆயுளுடனும் சீரும் சிறப்புமாக வாழவேண்டும் என்ற பிரார்த்தனையோடு தன்வந்திரி யந்திரம் அர்ச்சனை ஆராதனை செய்யப்பட்டது. (பூஜையை குமுதம் பக்தி ஸ்பெஷல் யூ டியூபில் பார்க்கலாம்)

என்னைத் தேடிவரும் பக்தரைப் பார்க்க நானும் தேடிவருவேன் என்பதுபோல், காஞ் சியில் இருந்த பவளவண்ணர், தன் பக்தரைத் தேடிவந்து அமர்ந்த தலம்.

தன் திருவடியே பக்தனுக்குப் பாதுகாப்பானது என்பதை பசுவானே உணர்த்துவதுபோல் சாவடி என்றே அமைந்த ஊரின் பெயர். வருந்தாதே நான் இருக்கிறேன் என்று வரம் தந்து அருளும் பெருந்தேவி தாயார் வீற்றிருக்கும் திருத்தலம். இன்னும் என்ன தாமதம், உடனே புறப்பட்டு காலடிப் பேட்டை சென்று கல்யாண வரதரை தரிசித்து வாருங்கள். அப்புறம் அவரே உங்களைத் தேடி வந்து அருள்வார்.

- ஜெயாப்ரியன்