#BREAKING | இரவில் உலா வந்த சிங்கம்? - வெளியானது அதிர்ச்சி தகவல்
தென்காசி சங்கரன்கோவில் அருகே இரவில் சிங்கம் உலா வந்ததாக வெளியான வீடியோ போலியானது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிங்கம் எதுவும் கிடையாது என வனத்துறையினர் விளக்கம்
தென்காசி சங்கரன்கோவில் அருகே இரவில் சிங்கம் உலா வந்ததாக வெளியான வீடியோ போலியானது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிங்கம் எதுவும் கிடையாது என வனத்துறையினர் விளக்கம்
அசோக்நகர் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த தமிழரசிக்கு கெடு - மகாவிஷ்ணு சர்ச்சை தொடர்பாக பதிலளிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
''ராகுல் காந்தி போன்றவர்கள் நமது நாட்டின் உச்சநீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் வெளிநாட்டில் அவமதிப்பு செய்கின்றனர். நமது நீதித்துறையின் செயல்பாடுகளையும், நமது ஜனநாயகத்தையும் விமர்சிக்கின்றனர்'' என்று கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
இன்று நடைபெற உள்ள போராட்டத்தில் கொள்ளுமாறு கலந்து ஆசிரியர்களை நிர்பந்திக்க கூடாது என தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவுக்கு தொடக்கக்கல்வித்துறை எச்சரிக்கை.
JABIL நிறுவனம் ஆப்பிள், சிஸ்கோ, HP நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்து வருகிறது. திருச்சியில் JABIL தொழிற்சாலை அமைவதன்மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில தேர்தல் வாக்காளர் பட்டியலை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம் என தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்
''தமிழகத்தின் பதின்ம வயது மாணவர்கள் தமிழில் எழுதப் படிக்க தடுமாறும் நிலை உருவாகியுள்ள வேளையில், தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பதன் காரணம் என்ன?'' என்று பாஜக கூறியுளளது.
திருச்சியில் JABIL எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க ரூ.2,000 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. JABIL நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்வதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தகவல்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இரவில் உலா வந்த சிங்கத்தினால் பரபரப்பு - பொதுமக்கள் பீதி. சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் சிங்கம் கடந்து சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்
ஐபோன் 16 ப்ரோவில் 6.3 இன்ச் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸில் 6.9 இன்ச் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன்களில் 48 MP மெயின் கேமரா, 48 MP அல்ட்ரா வொய்ட் கேமரா, 12 MP செல்பி கேமராக்கள் இடம்பெற்றுள்ளன.