K U M U D A M   N E W S

”நானே வேதனைல இருக்கேன்” மனைவிக்கு கத்திக் குத்து கேஷுவலாக எஸ்கேப்பான கணவன்!

மனைவியை குத்தி கொலை செய்துவிட்டு, அந்த சலனமே இல்லாமல், கையில் கட்டைப் பையுடன் செம கூலாக எஸ்கேப்பான கணவனை, போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எங்களுடன் நின்று போராடிய முதல்வர் இன்று நிலங்களை பறிக்கிறார்- பி.ஆர்.பாண்டியன்

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்தாண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் எங்களுடன் நின்று போராடினார். இன்று நிலங்களை பறிக்கிறார். நிலங்களை தர மறுக்கும் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

முற்றிலும் Unsafe Model அரசை நடத்தும் மு.க.ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை திமுக நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

மடோனா செபாஸ்டியன் நடித்த 'ஹார்ட்டின்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் காதல்-நகைச்சுவை (Rom-Com) திரைப்படம் 'ஹார்ட்டின்' தலைப்புக்கேற்றார் போல் இளமை ததும்பும் ஃபீல் குட் படமாக தயாராகி வரும் 'ஹார்ட்டின்' திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்குகிறார்.

முடிவுக்கு வந்த லட்டு விவகாரம் பொய்யை விற்ற களவாணிகள்.. தொழிற்சாலையும் இல்ல..நெய்யும் இல்ல..

திருப்பதி லட்டில் கலப்படம் செய்த சம்பவம் மொத்த இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தமிழக, ஆந்திர, உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைதும் செய்துள்ளனர். கைதான இவர்கள் வெறும் பொய்யை மட்டுமே வைத்து திருப்பதிக்கே மொட்டை போட்ட சம்பவத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

தவெகவின் முதல் பொதுக்குழு? எங்கே? எப்போது? அதிரடி காட்டும் விஜய்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட உள்ளதாகவும், அதற்கான இடம் மற்றும் தேதியை தவெக தலைவர் விஜய் குறித்துவிட்டதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தவெக முதல் பொதுக்குழு எப்போது, எங்கே நடக்கிறது? விரிவாக பார்ப்போம் இந்த செய்தி தொகுப்பில்.

செஞ்சி மஸ்தான் IN 4 மா.செக்கள் OUT வெளியான அதிரடி அறிவிப்பு..!

2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கி தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ஆளும் கட்சியான திமுக-வும் மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்து அதிரடி காட்ட தொடங்கி இருக்கிறது. அப்படி செய்யப்பட்ட மாற்றம் என்ன பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில். ..

டாக்கு மஹாராஜ் திரைப்பட வெற்றி.. தமனுக்கு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா

'டாக்கு மஹாராஜ்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தமனுக்கு நடிகர் பாலகிருஷ்ணா கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.

பிரபாகரன் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க கோரிக்கை.. உயர்நீதிமன்றத்தில் மனு

இந்தியாவில் தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

திருப்பதி - பழனி மீண்டும் பேருந்து சேவை இயக்க நடவடிக்கை- பவன் கல்யாண் தகவல்

திருப்பதியில் இருந்து பழனிக்கு மீண்டும் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழகம் போல் திருப்பதி உள்ளிட்ட கோயில்களில் பக்தர்களின் தரிசனம் எளிமையாக்கப்படும்  என்றும்  ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.