K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

ரயில் நிலையத்தில் பிரசவ வலியால் பெண்.. சாதுர்யமாக செயல்பட்ட மருத்துவர்!

ஜான்சி ரயில் நிலையத்தில் பிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு ஹேர் க்ளிப் மற்றும் பாக்கெட் கத்தியை வைத்து பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவருக்கு குவியும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நாங்கள் குடிமக்கள் இல்லையா? .. ஜாதி சான்றிதழ் கேட்டு தரையில் அமர்ந்து பழங்குடியின தர்ணா போராட்டம்!

பல வருடங்களாக பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காதால் மாணவ மாணவிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு: காவல்துறையினர் விசாரணை!

மாபெரும் வெற்றி பெற்ற மலையாள திரைப்படமான "மஞ்சும்மல் பாய்ஸ்" திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர் சௌபின் ஷாஹிர், அவரது தந்தை பாபு ஷாஹிர் மற்றும் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி ஆகியோர் கொச்சி காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

44 -வது பிறந்த நாளை கொண்டாடும் எம்.எஸ். தோனி.. ரசிகர்கள் வாழ்த்து!

இந்திய கிரிக்கெட் உலகின் மன்னன், அசாதாரண நாயகன், கேப்டன் கூல், தல என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இன்று (ஜூலை 7) தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சமூக வலைதளங்களில் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா.. மந்திரங்கள் ஓதி நடைபெற்ற திருக்குட நன்னீராட்டு..!

அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. செந்தமிழ் மந்திரங்கள் ஓதி நடைபெற்ற திருக்குட நன்னீராட்டைக் கண்டு பக்தர்கள் பரவசத்தில் திளைத்தனர்.

ஈரானில் சிக்கிய 15 மீனவர்கள்.. சென்னை வந்தவர்களை வரவேற்ற நயினார் நாகேந்திரன்!

ஈரான் நாட்டில் இருந்து மீட்டு அழைத்து வரப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 15 மீனவர்களை தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

"லக்கி பாஸ்கர்" படபாணியில் கொள்ளையடித்த வங்கி மேலாளர்.. வயதானவர்களின் வைப்பு நிதியை குறி வைத்து மோசடி!

லக்கி பாஸ்கர் படத்தில் யாரிடமும் சிக்காமல் கோடிக்கணக்கான ரூபாய் வங்கி பணத்தை மோசடி செய்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து, வங்கி மேலாளர் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயுடன் வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்தது போன்று, சென்னை அண்ணா நகரை சேர்ந்த இண்டஸ்இண்ட் வங்கி கிளை மேலாளர் லக்கி மஞ்சுளா கைவரிசை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு.. பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திருவிழா 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 6:15 முதல் 6:50 வரை நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

மாநில உரிமைக்கு குரல் கொடுத்தால் ஆன்ட்டி நக்சலைட்டுகள்.. விமர்சிக்கும் மத்திய அரசு - திருச்சியில் கனிமொழி பேச்சு

மாநில உரிமைக்கு குரல் கொடுத்தால் ஆன்ட்டி நக்சலைட்டுகள் என மத்திய அரசு அவர்களை அச்சுறுத்துகிறது என திருச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.