சம்பவம் நடந்தது என்ன?
சென்னை மவுலிவாக்கத்தைச் சேர்ந்த கிரண் ப்ரூஸ் என்பவர், தனது நண்பருடன் இணைந்து 'ரோஸ்டு பிரதர்ஸ்' என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி, ரோகிணி திரையரங்கில் வெளியான 'இட்லி கடை' திரைப்படத்தின் விமர்சனத்தை எடுப்பதற்காக அவர் சென்றிருந்தார்.
அப்போது, அண்மையில் கரூரில் நடந்த மரணங்கள் தொடர்பாகக் கிரண் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நான் தமிழக வெற்றிக் கழகக் கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறி, கிரண் ப்ரூஸை மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
போலீஸ் நடவடிக்கை
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், யூடியூபர் கிரண் ப்ரூஸ் இதுகுறித்துச் சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் அடையாளம் தெரியாத நபர் மீது ஆபாசமாகப் பேசுதல், கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், யூடியூபரை மிரட்டிய நபர் ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த கோகுல் என்பதும், அவர் ஒரு சாஃப்ட்வேர் டெவலப்பர் என்பதும் தெரியவந்தது. கோகுலை கைது செய்து விசாரித்ததில், அவர் தவெகவில் அடிப்படை உறுப்பினராக இருப்பதும், தீவிர விஜய் ரசிகர் என்பதும் உறுதி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட கோகுலிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
LIVE 24 X 7









