மழையில் சாமி தரிசனம்
காலையில் இருந்து மாலை வரை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலையில் சூறாவளி காற்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து கொட்டும் மழையிலும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வரிசையில் நின்றிருந்த பக்தர்கள் மழை காரணமாக முன் வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு இடையே செல்ல முற்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதேபோல் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாலையில் மழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
LIVE 24 X 7









