தமிழ்நாடு

ஆசிரியர்கள் போராட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் நாளை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 8-ம் நாளாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் போராட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் நாளை முக்கிய அறிவிப்பு!
Chief Minister to make important announcement tomorrow..
சம வேலைக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 8-வது நாளாகத் தொடர்கிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை

போராட்டம் நீடித்துவரும் நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் இன்று அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எ.வ. வேலு, மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டது.

நாளை முக்கிய அறிவிப்பு?

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான 'போட்டா ஜியோ' நிர்வாகிகள், "சம வேலைக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதியத் திட்டம் ஆகிய கோரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அமைச்சர்களிடம் இந்தக் கோரிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டன. கோரிக்கைகளை முதல்வரிடம் கொண்டு செல்வதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர்." என்று தெரிவித்தனர்.

மேலும், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நாளை (ஜனவரி 3) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று அமைச்சர்கள் தெரிவித்ததாக அவர்கள் தகவல் கூறினர். இந்த அறிவிப்பிற்காக ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.