விஷ்ணு தனது சமூக ஊடகப்பக்கங்களில் பங்குச்சந்தை, முதலீடு, க்ரிப்டோ கரன்சி போன்றவற்றில், தான் ஒரு நிபுணரான தோற்றத்தை உருவாக்கி வந்துள்ளார். இவரது பதிவுகள் மற்றும் வீடியோக்கள் மூலம் ஆயிரக்கணக்கான பாலோவர்களை ஈர்த்துள்ளார். அவரது மனைவி அஸ்மிதா, பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட் என்பதோடு, தனது கணவரின் பணிவாய்ப்புகளை வலுப்படுத்த பல வீடியோக்களில் பங்குபெற்றுள்ளார்.
இருவரும் இணைந்து "விநியோக துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளதாகவும், நீங்கள் முதலீடு செய்தால் பன்மடங்கு வருமானம் கிடைக்கும்" என பல்வேறு இணையவழி கூட்டத்தை நடத்தி பொதுமக்களிடம் இருந்து ஏராளமான நிதி வசூலித்துள்ளனர். ஆனால், முதலீட்டாளர்களுக்கு வாக்குறுதியளித்தபடி எந்தவிதமான வருமானமும் கிடைக்கவில்லை. மேலும், அவர்களின் பணமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இதையடுத்து, ஏமாற்றமடைந்த பலரும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்துள்ளனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த புகாரின் அடிப்படையில் விஷ்ணு, அஸ்மிதா உள்ளிட்ட இந்த மோசடியில் தொடர்புள்ளவர்கள் மீதும் மோசடி, நம்பிக்கையின்மை, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடும்பத்தின் உறுப்பினர்களை தனித்தனியாக பழகி மோசடி செய்து இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு குடும்பம் மோசடி செய்ததாக புகார்.
தற்போது இந்த வழக்கு தொடர்பான விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஆன்லைன் செயல்பாடுகள் அனைத்தும் கண்காணிக்கப்படுவதோடு, மோசடியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் விசாரணையின் மூலம் உறுதிப்படுத்தப்பட இருக்கிறது.
ஏற்கனவே அஸ்மிதா கொடுத்த புகாரில் அவரது கணவரான விஷ்ணுவை அதிரடியாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
LIVE 24 X 7









