சென்னையில் நேற்று குறைந்திருந்த தங்கம் விலை, இன்று (டிசம்பர் 10) மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. அதேசமயம், வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம் மற்றும் பின்னணி
தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் விலை குறையத் தொடங்கிய நிலையில், அதனைத் தொடர்ந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வந்தது. இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாக மீண்டும் உச்சத்தை நோக்கிப் பயணித்து வருகிறது. அந்த வகையில், நேற்று (டிசம்பர் 9) ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.320 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.96,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.12,030-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.96,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை புதிய உச்சம்
வெள்ளி விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரு கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,99,000-க்கு விற்பனையானது. இன்று, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8-ம், கிலோவுக்கு ரூ.8 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.207-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LIVE 24 X 7