தமிழ்நாடு

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

அபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
Gold Rate
கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, வாரத்தின் கடைசி நாளான இன்று சற்றுக் குறைந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 குறைந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டவர்களுக்குச் சற்றே ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

நேற்று முன்தினம் (ஜனவரி 2) ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.1,00,640-க்கு விற்பனையானது. இந்த உயர்வின் காரணமாக ஒரு கிராம் தங்கம் ரூ.12,580 ஆக இருந்தது.

இந்த நிலையில், இன்று (ஜனவரி 3) தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. இதன் காரணமாக, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.60 குறைந்து ரூ.12,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் தற்போது ரூ.1,00,160-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை சரிவு

தங்கத்தைப் போலவே, வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.4,000 உயர்ந்திருந்த நிலையில், இன்று அதே அளவு குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.4 குறைந்து ரூ.256-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,56,000-க்கு விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்படும் இந்த ஏற்ற இறக்கங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் நகைப்பிரியர்கள் மத்தியில் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன.