சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,000 சரிந்து விற்பனையானது. தொடர்ந்து விலை உயர்ந்து வந்த தங்கம், தீபாவளிக்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து வருவது, நகை வாங்கக் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை நிலவரம்
கடந்த வாரத்திற்கு முன்னதாகத் தொடர்ந்து இருமுறை விலை உயர்ந்து உச்சத்தைத் தொட்ட தங்கம், தற்போது தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்தச் சரிவு இன்று ஒரே நாளில் மிகப் பெரிய அளவில் நிகழ்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ. 1,200 குறைந்து ரூ. 90,400-க்கும், கிராமுக்கு ரூ. 150 குறைந்து ரூ. 11,300-க்கும் விற்பனையானது. மாலை நிலவரப்படி தங்கம் விலை மேலும் சரிவைச் சந்தித்தது. அதன்படி, கிராம் ஒன்றுக்கு மேலும் ரூ. 225 குறைந்து ரூ. 11,075-க்கும், சவரனுக்கு மேலும் ரூ. 1,800 குறைந்து ரூ. 88,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம், இன்று காலை மற்றும் மாலைச் சரிவைச் சேர்த்துப் பார்க்கும்போது, ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 3,000 குறைந்துள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை இன்று காலை நிலவரப்படி கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 165-க்கு விற்பனையானது. மாலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கம் விலை உச்சத்தைத் தொட்ட நிலையில், கடந்த ஒரு வாரமாகப் படிப்படியாகக் குறைந்து வருவது, நகை வாங்குவோருக்குப் பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்துள்ளது.

LIVE 24 X 7