மேலும், இரண்டு குழந்தைகள் அடிக்கடி அழுது கொண்டிருப்பதால் குழந்தையை வளர்க்க முடியாமல் பாரதி தூக்கமின்றி தவித்து வந்ததாகவும், இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால் ஒரு குழந்தையை மட்டும் வீட்டின் 2வது மாடியில் இருந்து கீழே வீசிக் கொலை செய்ததாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து, உறவினர்களிடம் குழந்தையை காணவில்லை என கூறியுள்ளார். மேலும், காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, குழந்தையை யாரும் திருடிச் சென்றுவிட்டார்களா என்று போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தும், வீட்டின் அருகிலுள்ள இடங்களில் தேடியுள்ளனர்.
அப்போது அங்கு புதர் மண்டிய இடத்தில் கட்டை பையில் குழந்தை இறந்த நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணையில் தாயே குழந்தையை மாடியில் இருந்து வீசிக் கொன்றது அம்பலமானது. பிறந்து 43 நாட்களே ஆன பெண் குழந்தையை தாயே கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குழந்தையை கொலை செய்த தாய் பாரதியை நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
LIVE 24 X 7









