சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக, ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள பழமையான ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோவில் ராஜ கோபுரத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆலயம் காப்போம் கூட்டமைப்பு சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Read More: பாகிஸ்தானில் சுமார் 100 பேருடன் பயணிகள் ரயில் கடத்தல்.. 11 வீரர்கள் உயிரிழப்பு
பொதுநல வழக்கில், மெட்ரோ ரயில் நிலைய நுழைவு, வெளியேறும் பாதை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன வளாகத்தில் மாற்றப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்ததை பதிவு செய்துகொண்டு வழக்கை முடித்து வைத்தது. இந்நிலையில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 837 சதுர மீட்டர் பரப்பு நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஏற்கனவே முன் அனுமதி பெற்று 200 கோடி ரூபாய் செலவில் யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் கட்டுமானங்கள் மேற்கொண்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தில் தெரிவித்த உத்தரவாதத்தை செயல்படுத்தும் விதமாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Read More: IQAir-ன் உலக காற்று தர அறிக்கை.. இந்தியாவிற்கு 5-வது இடம்...!
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பு, வசதி மற்றும் தொழில்நுட்ப காரணங்களுக்காக மெட்ரோ ரயில் நிலைய திட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, பழையபடி கோவில் முன் மெட்ரோ ரயில் நிலையம் அமைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
LIVE 24 X 7









