எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றின் குறுக்கே கதவனை மின் நிலையும் செயல்பட்டு வருகிறது. இந்த கதவணை மின் நிலையத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். அதன் அடிப்படையில் நேற்று மாலை முதல் கதவுகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.
இதனால் பூலாம்பட்டிக்கும் நெருஞ்சிபேட்டைக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றை கடந்து செல்ல சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் எடப்பாடி நகரம், ஒன்றியம் மற்றும் கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி ஆகிய ஒன்றிய பகுதிகளுக்கு செல்லும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்படுவதாகவும் அதனால் பொதுமக்கள் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளனர்.
LIVE 24 X 7









