தமிழ்நாடு

தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்வு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.3000 குறைந்த நிலையில், இன்றும் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்வு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
Gold Price
நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,000 குறைந்து பெரும் சரிவைச் சந்தித்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று (அக். 29) ஒரே நாளில் ரூ.2,000 உயர்ந்து, வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலை நிலவரம்

தீபாவளிக்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து வந்த தங்கம் விலை, நேற்று மட்டும் காலை மற்றும் மாலை என இருமுறை குறைந்து, ஒட்டுமொத்தமாகச் சவரனுக்கு ரூ.3,000 சரிந்தது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ரூ. 11,210-க்கும், சவரனுக்கு ரூ. 1,080 உயர்ந்து ரூ. 89,680-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவுபெறும்போது தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. மாலையில் சவரனுக்கு ரூ. 920 உயர்ந்து ரூ. 90,600-க்கும், கிராமுக்கு ரூ.115 அதிகரித்து ரூ. 11,325-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, இன்று காலை ஏற்பட்ட ரூ. 1,080 உயர்வும், மாலையில் ஏற்பட்ட ரூ. 920 உயர்வும் சேர்த்து, ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,000 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை நிலவரம்

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.166-க்கு விற்பனையானது. மாலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது.