தமிழ்நாடு

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு!
Gold Rate
வாரத்தின் கடைசி நாளான இன்று (சனிக்கிழமை) வணிகம் தொடங்கிய நிலையில், சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

தங்கத்தின் விலை ஏற்கனவே ஒரு சவரன் ரூ.1 லட்சத்தைத் தொட்டு வரலாறு காணாத உச்சத்தை அடைந்திருந்த நிலையில், தற்போது நாள்தோறும் விலை அதிகரித்து வருகிறது. இன்று காலை வணிகம் தொடங்கியதும், தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை புதிய உச்சம்

தங்கத்தின் விலையை விட வெள்ளி விலை மிக வேகமாக உயர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு, வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது. இன்று காலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.226க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2.26 லட்சத்தை எட்டியுள்ளது.