தமிழ்நாடு

தங்கம் விலை மீண்டும் குறைந்தது.. சவரனுக்கு ரூ.320 சரிவு!

ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 சரிந்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் குறைந்தது.. சவரனுக்கு ரூ.320 சரிவு!
Gold Price
தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் ரூ.3,680 குறைந்த நிலையில், இன்றும் சவரனுக்கு மேலும் ரூ.320 குறைந்து நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

விலை ஏற்ற இறக்கம்

அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 18-ஆம் தேதி சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.96,000க்கு விற்பனையானது. தீபாவளியன்று சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.95,360க்கு விற்பனையானது. கடந்த 21 ஆம் தேதி மீண்டும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.96,000க்கு விற்பனையானது.

நேற்று மற்றும் இன்று நிலவரம்

நேற்று (அக்டோபர் 22) ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை சரிவை கண்டது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.460 குறைந்து ஒரு கிராம் ரூ.11,540க்கு விற்பனையானது. சவரனுக்கு மொத்தமாக ரூ.3,680 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து, ரூ.11,500க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.320 குறைந்து, ரூ.92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்றும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.174க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை ரூ.92,000 என்ற அளவிற்குச் சரிந்துள்ளதால், நகை வாங்குவோர் மத்தியில் தொடர்ந்து நிம்மதி நீடிக்கிறது.