இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் கோட்டூர்புரத்தில் அளவீடு செய்யும் பணியை இன்று மேற்கொண்டுள்ளனர். பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சொந்தமான கோட்டூர் மண்டபசாலையில் குடியிருந்து வரும் 15 குடியிருப்புகளை அதிகாரிகள் அளவீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அளவீடு செய்து வாடகை நிர்ணயம் செய்ய உள்ளனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ரவுடி ஞானசேகரன் வீடு சென்னை மாநகராட்சி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டியது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.
அதையும் சேர்த்து அளவீடு செய்து ஆக்கிரமிப்பு நிலம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அளவிட்டாளர்கள் அடங்கிய குழு அளவீடு செய்யும் பணியை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
LIVE 24 X 7









