கடந்த இரண்டு தினங்களாகத் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்றுக் குறைந்துள்ளது. இந்த விலை இறக்கம் முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
தங்கம் விலையின் இன்றைய நிலவரம்
சர்வதேசச் சந்தையின் நிலவரங்களுக்கு ஏற்ப நாள்தோறும் மாற்றியமைக்கப்படும் தங்கம் விலையில், கடந்த வாரத்தின் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ. 1 லட்சத்தைத் தொட்டு இமாலய உச்சத்தை அடைந்தது. இதன் பிறகு சற்றே குறைந்த தங்கம் விலை, மீண்டும் கடந்த இரண்டு நாட்களாக உயரத் தொடங்கியது.
இந்த நிலையில், இன்று (டிசம்பர் 19) தங்கம் விலை சற்றுக் குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் தற்போது ரூ.12,380-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.99,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையின் இன்றைய நிலவரம்
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. வெள்ளி கிலோ நேற்றைய தினம் ரூ. 4 ஆயிரம் உயர்ந்த நிலையில், இன்று விலை சற்றுச் சரிந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி தற்போது ரூ.221-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் இந்த விலை குறைவானது, முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைச் சற்றே ஆறுதல் அடைய செய்துள்ளது.

LIVE 24 X 7