பாலியல் தொல்லை
வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வருபவர் அன்பழகன். இவர் அதே கல்லூரியில் பணியாற்றும் 37 வயதுடைய திருமணமாகாத பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் மதிவாணனிடம் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த மார்ச் 18-ம் தேதி கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சிறையில் அடைப்பு
21ஆம் தேதி துணை முதல்வர் அன்பழகன் கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக வேலூர் மகளிர் காவல் நிலையம் வரை சென்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.இந்த நிலையில் அன்பழகனை தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராசனப் பள்ளிக்கு சென்று அங்கு தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வேலூர் போலீசார் அங்கு சென்று தலைமறைவாக இருந்த அன்பழகனை கைது செய்து இன்று வேலூர் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர்.
பின்னர் அன்பழகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.இதனைத்தொடர்ந்து அன்பழகன் போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழ்நாடு
வேலூரில் பாலியல் தொல்லை வழக்கில் சிக்கிய கல்லூரி துணை முதல்வர்...சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்
LIVE 24 X 7









