சென்னை, வானகரம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர், கிண்டியில் இருந்து போரூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கும்போது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால், கார் கட்டுப்பாட்டை இழந்து, பக்கவாட்டுச் சுவரில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தைக் கண்ட மற்ற வாகன ஓட்டிகள் உடனடியாக விரைந்து வந்து, காரில் சிக்கியிருந்த தர்மராஜை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை போக்குவரத்து போலீசார், விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீர்செய்தனர். விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
LIVE 24 X 7









