இதனையடுத்து, பேருந்து நிலையத்தில் இருந்த போக்குவரத்து உதவி மேலாளரிடம் பேருந்தை எடுக்க கோரி பயணிகள் முறையிட்டனர். அதற்கு அவர், ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுப்பதற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் வேறு பேருந்தில் பயணிக்கவும் அவர் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் திடீரென கூறினால் நாங்கள் எப்படி செல்வது? என உதவி மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கு வந்த தாராபுரம் கிளை ஓட்டுநர் கணேசனை கடுமையாக திட்டிய உதவி மேலாளர் மாரிமுத்து, அவரை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றார்.
அப்போது உதவி மேலாளர் மாரிமுத்து திடீரென ஓட்டுநர் கணேசனை தனது செருப்பால் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார். 'நீ என்ன பயணிகளை வைத்து தூண்டி விடுகிறாயா.?' என கேள்வி எழுப்பியுள்ளார். இதனை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்த பயணிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மேலும் இந்த வீடியோ வைரலான நிலையில், உதவி மேலாளர் மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு பேருந்து ஓட்டுநர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், உதவி மேலாளர் மாரிமுத்துவை பணி இடை நீக்கம் செய்து மதுரை மண்டல போக்குவரத்து நிர்வாக இயக்குநர் இளங்கோவன் நடவடிக்கை மேற்கொண்டார். இருப்பினும் சம்பவத்தை கண்டித்து தமிழக முழுவதிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, உதவி மேலாளர் மாரிமுத்து தனது செயலுக்கு மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இந்த நிலையில், ஓட்டுநர் கணேசனை காலணியால் அடித்தும் அவதூறாக பேசியதற்காக கரிமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளர் மாரிமுத்து உள்ளிட்ட நான்கு பேர் மீது ஐந்து பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
LIVE 24 X 7









