இயந்திரக்கோளாறு
இதை அடுத்து விமானத்தை அவசரமாக டாக்ஸி பாதையில் நிறுத்திவிட்டு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விமான பொறியாளர்கள் குழு மற்றும் விமான நிலைய தரை தளம் பராமரிப்பு ஊழியர்கள் விரைந்து வந்த விமானம் மற்ற விமான போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், ஒரு ஓரமாக தள்ளிக்கொண்டு நிறுத்தப்பட்டது.
விமான பொறியாளர்கள் குழு பழுதடைந்த இயந்திரங்களை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் விமானத்துக்குள்ளையே அமர வைக்கப்பட்டு உள்ளனர். விமானத்தை பழுது பார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இதனால் துபாய் செல்ல வேண்டிய 312 பயணிகள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, விமானத்துக்குள் இருந்து தவித்தனர்.
உயிர் தப்பிய பயணிகள்
பின்னர் நடைமேடை அருகே விமானம் கொண்டு வரப்பட்டது. பயணிகள் இறக்கப்பட்டனர். பழுது உடனே சரி செய்யப்படாததால் ரத்து என அறிவிக்கப்பட்டது. பழுது சரி செய்த பின் விமானம் துபாயிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்சது. இதையடுத்து பயணிகள் ஒட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அவசர செல்ல கூடியவர்களை வேறு விமானங்களில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்தால் 326 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
LIVE 24 X 7









