13-வது ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நவி மும்பையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் கோப்பையை வெல்லும் வேட்கையுடன் இந்திய மகளிர் அணியும், தென் ஆப்பிரிக்க மகளிர் அணியும் மோதுகின்றன.
போட்டி நடைபெறும் இடம் மற்றும் நேரம்
இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் இந்தப் போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற நிலையில், இரண்டு நாள் ஓய்வுக்குப் பிறகு இறுதிப் போட்டி இன்று நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கவுள்ளது.
அரையிறுதிப் போட்டிகளின் முடிவுகள்
கடந்த 26-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் நிறைவுபெற்றன. நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. கடந்த 29-ம் தேதி குவாஹாட்டியில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. அதைத்தொடர்ந்து, கடந்த 30-ம் தேதி நவி மும்பையில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதல்முறையாக உலகக் கோப்பையை வெல்வதற்காக இந்திய அணி இன்று களமிறங்குகிறது.
பரிசுத் தொகை
இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்குச் சுமார் ரூ.40 கோடி பரிசுத்தொகை கிடைக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. இரண்டாவது இடம் பெறும் அணிக்குச் சுமார் ரூ.20 கோடியும் பரிசாகக் கிடைக்கும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.

LIVE 24 X 7