2026 டி20 உலகக் கோப்பையின் மகுடத்தைச் சூடப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் கை ஓங்கி இருந்தாலும், உலகக் கோப்பைத் தொடர்களில் நியூசிலாந்து அணி இந்தியாவிற்குச் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. இதுவரை இரு அணிகளும் டி20 போட்டிகளில் 30 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 18 முறையும், நியூசிலாந்து 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன; ஒரு போட்டி சமனில் முடிந்தது. குறிப்பாக 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெற்ற 10 போட்டிகளில், நியூசிலாந்து அணியால் இரண்டு முறை மட்டுமே இந்தியாவை வீழ்த்த முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பைகளில் நியூசிலாந்தின் ஆதிக்கம்
இருப்பினும், டி20 உலகக் கோப்பைத் தொடர்களைப் பொறுத்தவரை வரலாறு வேறாக இருக்கிறது. இதுவரை உலகக் கோப்பை மேடையில் மூன்று முறை (2007, 2016, 2021) மோதியுள்ள இந்த இரு அணிகளில், மூன்று முறையுமே நியூசிலாந்து அணியே வெற்றி வாகை சூடியுள்ளது. உலகக் கோப்பைத் தொடர்களில் இந்தியா இதுவரை நியூசிலாந்தை வீழ்த்தியதே இல்லை என்ற புள்ளிவிவரம், இந்திய ரசிகர்களுக்குச் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மைதானத்தின் சவாலும் டாஸ் முக்கியத்துவமும்
இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நரேந்திர மோடி மைதானத்தில், 2023-இல் நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியிருந்தது. ஆனால், இதே மைதானத்தில் தான் 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகளுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது (14 போட்டிகளில் 9 முறை). எனவே, இறுதிப் போட்டியில் 'டாஸ்' வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும்.
வெற்றி வாய்ப்பு யாருக்கு?
கடந்த கால உலகக் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், தற்போதைய ஃபார்ம் மற்றும் சொந்த மண்ணில் விளையாடும் சாதகம் இந்திய அணிக்கு அதிக வாய்ப்புகளை வழங்குகிறது. உலகக் கோப்பைத் தொடர்களில் நியூசிலாந்திற்கு எதிராகத் தொடரும் 'வெற்றி பெறவில்லை' என்ற தடையை உடைத்து, இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லுமா என்பதே ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் எதிர்பார்ப்பாக உள்ளது.

LIVE 24 X 7