இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் நான்காவது ஆட்டம், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏக்கனா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (டிசம்பர் 17) மாலை 7 மணிக்குத் தொடங்குகிறது. இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
தொடரின் நிலை மற்றும் சவால்கள்
கட்டாக்கில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சண்டிகரில் நடந்த இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், தர்மசாலாவில் நடந்த மூன்றாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி மீண்டும் முன்னிலை பெற்றது.
இத்தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், சர்வதேச அளவில் இரு நாடுகளுக்கு இடையேயான டி20 தொடர்களில் தொடர்ந்து இந்திய அணி வெல்லும் 8வது தொடராக இது இருக்கும்.
இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பலம்
இந்திய அணியின் பேட்டிங்கைப் பொருத்தவரை, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இன்னமும் ஃபார்முக்குத் திரும்பாமல் உள்ளனர். சூர்யகுமார் யாதவ் கடைசியாக விளையாடிய 21 போட்டிகளிலும், சுப்மன் கில் களமிறங்கிய 18 போட்டிகளிலும் இதுவரை ஒருமுறை கூட அரைசதம் அடிக்கவில்லை. இருவரும் ஃபார்முக்குத் திரும்பினால் இந்திய அணியின் பேட்டிங் மேலும் பலப்படும்.
கில்லுக்கு டாப் ஆர்டரில் வழிவிடும் வகையில் சஞ்சு சாம்சன் பேட்டிங் ஆர்டரில் கீழ் இறக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சு பலம் வாய்ந்ததாகத் திகழ்கிறது. அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பந்துவீச்சில் கலக்கிக் கொண்டுள்ளனர். பும்ராவுக்கு மாற்றாக வந்த ஹர்ஷித் ராணா கடந்த போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார்.
தென்னாப்பிரிக்க அணியின் நிலை
எய்டன் மார்க்கரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, சிறந்த பேட்டிங் மற்றும் பந்துவீச்சு லைன் அப்பைக் கொண்டிருக்கிறது. இருப்பினும், வலிமையான இந்திய அணியை வீழ்த்த அந்த அணியின் வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாகச் செயல்பட வேண்டி இருக்கிறது. மேலும் பேட்டிங்கில் சற்று தடுமாறும் தென்னாப்பிரிக்கா, அதனை சரி செய்துகொண்டு இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LIVE 24 X 7