அதிவேக 150 ரன்கள் மற்றும் 19 சிக்ஸர்கள்..
இந்த போட்டியில், ஃபின் ஆலன் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் வெறும் 49 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். இது டி20 கிரிக்கெட்டில் ஒரு வீரர் எடுத்த அதிவேக 150 ரன்களாகும். இந்த இன்னிங்ஸில் அவர் 19 சிக்ஸர்களை விளாசி, கிறிஸ் கெயில் மற்றும் சஹில் சவுகான் ஆகியோரின் 18 சிக்ஸர்கள் சாதனையை முறியடித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு டாக்காவில் நடந்த பிபிஎல் போட்டியில் டாக்கா டைனமைட்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் அணியை விளையாடிய கிறிஸ் கெயில், 18 சிக்ஸர்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடி தொடக்கம் மற்றும் விரைவான சதம்..
இந்த போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி டாஸ் தோற்று முதலில் பேட் செய்தது. முதலில் களமிறங்கிய ஃபின் ஆலன், பவர்பிளேயில் 14 பந்துகளில் ஐந்து சிக்ஸர்களுடன் 40 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். 20 பந்துகளில் 50 ரன்களை கடந்த அவர், ஒரு ஓவரில் மூன்று சிக்ஸர்களை இருமுறை அடித்து, தனது நான்காவது டி20 சதத்தை வெறும் 34 பந்துகளில் எட்டினார். இது MLC-யில் அடிக்கப்பட்ட அதிவேக சதம் மற்றும் நியூசிலாந்து பேட்ஸ்மேன் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிவேக டி20 சதமாக பார்க்கப்படுகிறது. 17வது ஓவரில் தனது 19வது சிக்ஸரை அடித்து சாதனை படைத்த ஆலன், அடுத்த ஓவரில் தனது 20வது சிக்ஸருக்காக பந்தை அடிக்க முற்பட்டு ஆட்டமிழந்தார்.
மேலும், ஃபின் ஆலன் தனது 151 டி20 இன்னிங்ஸ்களில் 4,100 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். கடந்தாண்டு, ஜனவரி 2024 இல், பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 62 பந்துகளில் 137 ரன்கள் எடுத்து பிரண்டன் மெக்கல்லமின் நியூசிலாந்து டி20ஐ சாதனையை ஆலன் முறியடித்தார். அந்த இன்னிங்ஸில் அவர் 16 சிக்ஸர்களை அடித்து, ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லா சஜாய் சாதனையை சமன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
LIVE 24 X 7









