விளையாட்டு

தோனிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தனக்கு எதிராகக் கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைச் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தோனிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Case against Dhoni dismissed
தனக்கு எதிராகக் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த ரூ. 100 கோடி மான நஷ்டஈடு வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வழக்கின் பின்னணி

ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.

இதன்மூலம் தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தனி நீதிபதி உத்தரவு

தோனியின் வழக்கை நிராகரிக்கக் கோரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கியுள்ள நிலையில், இந்த மனுவை ஏற்றுக்கொண்டால் பிரதான வழக்கு முடிவுக்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஜோதிராமன் அமர்வு விசாரித்தது.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.