கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி தவெக நிர்வாகிகள் நீதிபதி தண்டபாணியிடம் முறையிட்டுள்ளனர்.
நீதிபதியிடம் முறையீடு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று கரூரில் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று (செப். 28) தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார், நீதிபதி எம். தண்டபாணியைச் சந்தித்து இதுகுறித்து முறையீடு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மல்குமார், "நீதிபதியிடம் இது குறித்து முறையீடு செய்துள்ளோம். நாளை (செப். 29) மதியம் 2.15 மணிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகச் சொல்லியுள்ளார். இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் விரிவாகப் பேச வேண்டாம்" என்று தெரிவித்தார். மேலும், நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பின்னர் தங்கள் கருத்தைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.
பதிலளிக்காமல் மௌனம் காத்த நிர்மல்குமார்
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள், "தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் செல்வாரா?" என்றும், "தவெக நிர்வாகிகள் யாரும் ஏன் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை?" என்றும் நிர்மல்குமாரிடம் கேள்வியெழுப்பினர்.
இந்தக் கேள்விகளுக்கு அவர் பதில் எதுவும் அளிக்காமல், மௌனம் காத்துவிட்டு அங்கிருந்து நழுவிச் சென்றார். இந்தக் கோர விபத்துக்குப் பிறகு, கட்சியின் தலைவர் விஜய் எப்போது கரூருக்கு நேரில் சென்று மக்களைச் சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

LIVE 24 X 7