பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பு குறித்துத் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோரிடையே நிலவி வந்த மோதல் காரணமாக, கட்சியின் நிரந்தரச் சின்னமான 'மாம்பழம்' சின்னம் முடக்கப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (டிசம்பர் 4) தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு பா.ம.க. ஆதரவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வழக்கின் பின்னணியும் ராமதாஸின் மனுவும்
பா.ம.க. தலைவர் பொறுப்பு விவகாரத்தில் அன்புமணி ராமதாஸை அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். முன்னர், அன்புமணி ராமதாஸ் தான் தற்போதைய தலைவர் என்றும், வேண்டும் என்றால் ராமதாஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடிக் கொள்ளும்படியும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்கள்
இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரான ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர், ராமதாஸ் தான் கட்சியை நிறுவினார் என்றும், போலி ஆவணங்கள் அடிப்படையில் அன்புமணி ராமதாஸை தேர்தல் ஆணையம் தலைவராக அங்கீகரித்துள்ளது என்றும் குற்றம் சாட்டி, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர், கட்சியின் பொதுக்குழு அன்புமணியை கட்சித் தலைவராக அங்கீகரித்துள்ளது என்றும், இதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சரியானதுதான் என்றும் வாதிடப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு மற்றும் உத்தரவு
இரு தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த பிறகு, தேர்தல் ஆணையம் சார்பில், "பா.ம.க.வில் தற்போது தலைமைப் பிரச்னை நீடிக்கிறது. இதனால் கட்சியின் சின்னமான மாம்பழத்தை யாருக்கும் ஒதுக்க முடியாது. அன்புமணி தரப்புக்கோ, ராமதாஸ் தரப்புக்கோ இந்தச் சின்னத்தை வழங்க முடியாது. ஏனென்றால் தேர்தல் சமயத்தில் வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்னை வரும். இதனால் பா.ம.க.விற்குச் சின்னம் ஒதுக்க முடியாது," என்று பதிலளிக்கப்பட்டது.
மேலும், தலைமைப் பொறுப்பு குறித்த இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண ராமதாஸ் தரப்பைச் சிவில் நீதிமன்றத்தை நாடவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சியின் சின்னம் முடக்கப்படும் என்ற தகவல் பா.ம.க. ஆதரவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

LIVE 24 X 7