அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் நிலவரம் குறித்து அமித்ஷா கேட்டறிந்ததாகத் தெரிவித்தார்.
அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெரும்
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாகத் தெரிவித்தார். "எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும். தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசியபோது, "அமித்ஷாவிடம் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து மட்டுமே அவர் கேட்டறிந்தார். யாருடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை என்பது வெளிப்படையாகப் பேச முடியாது" என்று தெரிவித்தார். மேலும், "ரகசியமாக இருந்தால்தான் அரசியல் கட்சிக்கு அந்தஸ்து உண்டு" என்று டி.டி.வி. தினகரன் கூட்டணியில் இணைவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மறுப்புத் தெரிவிக்காமல் பதில் அளித்தார்.
ஓ.பி.எஸ்., சசிகலாவுக்கு வாய்ப்பில்லை
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார். "ஓ.பி.எஸ்.-க்கு அ.தி.மு.க.வில் இடமில்லை என்று பலமுறை சொல்லிவிட்டேன்," என்று அவர் மீண்டும் உறுதிபடக் கூறினார்.
தி.மு.க.வின் ஓய்வூதியத் திட்டம் ஏமாற்று வேலை
தி.மு.க. அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடினார். "பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவதாக தி.மு.க. வாக்குறுதி கொடுத்தது. ஆனால், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவுடன், புதிதாக ஓர் ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து அவர்களை ஏமாற்றியுள்ளது," என்று குற்றம் சாட்டினார்.
மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்துக்கும், தமிழக அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றும், பெயரை மட்டுமே மாற்றியிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

LIVE 24 X 7