நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல. உடனடியாக ரயில் கட்டண உயர்வை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால், ரயில்களுக்கான கட்டணத்தில் பைசா கணக்கில் உயர்த்தப்பட உள்ளதாக வந்த செய்தியைக் கேட்ட மக்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் களவாடப்பட்டிருக்கிறது என்று கூறும் முதலமைச்சரே...
கடந்த நான்காண்டுகளாக உங்களது ஏமாற்று மாடல் ஆட்சியில் ஆயிரக் கணக்கில் ஏற்றப்பட்ட சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, தொழில்வரி உயர்வு, பதிவுக் கட்டணங்கள் உயர்வு என்று அரசின் அனைத்து வரி மற்றும் கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள நடுத்தரக் குடும்பங்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதைப் பற்றி தினமும் கண்ணாடி முன் நின்று நீங்கள், உங்கள் முகத்தைப் பார்க்கும்போது சிந்திக்கவில்லையா?
உங்களால் ஏற்றப்பட்ட வரி, கட்டண உயர்வுகளைக் குறைக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா? தமிழக மக்களின் சந்தோஷங்களை எல்லாம் கொள்ளையடித்த ஒரு நபர், களவாடுவது பற்றி புலம்புவது 'சாத்தான் வேதம் ஒதுவது போல்' உள்ளது” என்று விமர்சித்துள்ளார்.
LIVE 24 X 7









