தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தச் சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, பாஜக தரப்பில் 45 தொகுதிகள் கோரப்பட்ட நிலையில், 25-க்கு மேல் தர முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பியூஷ் கோயல் சென்னை வருகை மற்றும் கமலாலயத்தில் ஆலோசனை
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இணைப் பொறுப்பாளர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மொஹோல் ஆகியோருடன் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கமலாலயத்தில் நடைபெற்ற பாஜக மையக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் வியூகங்கள், கூட்டணி விரிவாக்கம், தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது. மைலாப்பூர், தி.நகர், கோவை, திருப்பூர், ஊட்டி, நாகர்கோவில் உள்ளிட்ட 45 தொகுதிகளை உள்ளடக்கிய 60 தொகுதிகள் கொண்ட உத்தேசப் பட்டியலை எடப்பாடியுடன் சந்திப்பின்போது அளிக்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகக் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடியுடன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு பேச்சு
கமலாலய கூட்டத்திற்குப் பிறகு, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பியூஷ் கோயல் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையில் இரு கட்சி முக்கிய நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
பாஜக கோரிக்கை: 60 தொகுதிகளைத் தங்களிடம் ஒப்படைத்தால், அதில் ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் போன்ற சிறிய கட்சிகளுக்குச் சீட் ஒதுக்கித் தருவதாகவும், அமமுக மற்றும் ஓ.பி.எஸ். தரப்புக்கு 15 சீட்களை இந்த 60 தொகுதிகளில் கொடுத்துவிடுவதாகவும் பியூஷ் கோயல் கூறியதாகத் தெரிகிறது.
அதிமுக மறுப்பு: இதற்குப் பதிலளித்த எடப்பாடி தரப்பு, டி.டி.வி. தினகரன் 6 சீட் மற்றும் ஓ.பி.எஸ். 3 சீட் தர தயார் என்றும், பாஜகவுக்கு 23 தொகுதிகள், பாமகவிற்கு 23, தேமுதிகவுக்கு 6 சீட் தர தயாராக இருப்பதாக இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், பாஜக கூடுதல் தொகுதிகளைக் கேட்டு வலியுறுத்தியபோதும், 23 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று எடப்பாடி தரப்பு திட்டவட்டமாகக் கூறியதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவு
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாகத் தெரிவித்தார்.

LIVE 24 X 7