திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. 'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாகத் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
'வாக்காளர் பட்டியலில் கவனம் தேவை'
இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக தொண்டர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். டிசம்பர் 11-ஆம் தேதி எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்த பிறகு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானவுடன், திமுக தொண்டர்கள் இன்னும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுவிடக் கூடாது என்பதைத் தொண்டர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
மேலும், பெயர்கள் விடுபட்டிருந்தால் அவர்களின் பெயர்களைச் சேர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் மற்றும் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வெற்றி வாய்ப்புகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

LIVE 24 X 7