ஆனாலும், அண்ணாமலையை வைத்து அறிவாலயத்திற்கு குடைச்சல் கொடுக்க டெல்லி பாஜக தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. இதற்காக தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியை அண்ணாமலைக்கு கொடுத்து, தி.மு.கவிற்கு எதிராக அட்டாக் செய்ய பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தவிர 2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலையை போட்டியிட வைக்கவும் டெல்லி பா.ஜ.க பரிசீலிப்பதாக கமலாலய வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் வடசென்னை தொகுதிக்குட்பட்ட கொளத்தூரில் அதிக வாக்குகளை பா.ஜ.க. வாங்கி இருந்ததாகவும், இதையெல்லாம் மனதில் வைத்தே ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலையை களத்தில் இறக்கி, தி.மு.கவிற்கு குடைச்சல் கொடுக்க டெல்லி பா.ஜ.க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்படி ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலையை களமிறக்குவதால், வெற்றி பெற முடியவில்லை என்றாலும், கணிசமான வாக்குகள் அண்ணாமலை பெற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், மத்திய பாஜகவின் இந்த ப்ளான் மாநில பாஜகவுக்கு என்ன மாதிரியான ரிசல்ட்டை கொடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்..
- ஜனனி சசிகலா✒️
LIVE 24 X 7









