சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ. அருள் சென்ற காரை வழிமறித்து சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக, கட்சி நிறுவனர் ராமதாஸின் ஆதரவாளரான அருள், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள் மீது கொலை முயற்சிப் புகாரைக் கூறியுள்ளார்.
கார் மீது தாக்குதல்
சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான அருள், இன்று சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் நடுவழியில் அவரது காரை வழிமறித்துத் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
அந்தக் கும்பல் காரைக் கடுமையாகத் தாக்கிய நிலையில், அருளின் ஆதரவாளர்கள் அதனைத் தடுக்க முயன்றபோது அவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இது தன் மீதான கொலை முயற்சி என்று பாமக எம்.எல்.ஏ. அருள் குற்றம் சாட்டியுள்ளார்.
அன்புமணி ஆதரவாளர்கள் மீது புகார்
பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ராமதாஸின் தீவிர ஆதரவாளரான அருள், இந்தத் தாக்குதலை அன்புமணி ஆதரவாளர்கள் நடத்தியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்திய கும்பலில், அன்புமணி ஆதரவாளரான சேலம் மாவட்டச் செயலாளர் ஜெயபிரகாஷ் இருந்ததாகவும் எம்.எல்.ஏ. அருள் குற்றம் சாட்டியுள்ளார்.
தன் மீதான கொலை முயற்சித் தாக்குதல் குறித்து அருள், சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்க உள்ளார். இந்தச் சம்பவம் பாமக கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதலை மேலும் வெளிப்படுத்தியுள்ளது.
                
LIVE 24 X 7