தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் முடிவில், பா.ம.க. அதிகாரப்பூர்வமாக அ.தி.மு.க. கூட்டணியில் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பசுமை வழிச்சாலையில் சந்திப்பு
சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகன் உடனிருந்தார். சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதிகள் பங்கீடு குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.
கூட்டணி அறிவிப்பு மற்றும் நோக்கம்
சந்திப்பிற்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமியும், அன்புமணி ராமதாஸும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சு: "வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஏற்கெனவே அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது எங்கள் கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றுள்ளது. இது தொண்டர்கள் விரும்பிய, இயற்கையாக அமைந்த கூட்டணி. நாங்கள் இணைந்து இந்தத் தேர்தலைச் சந்தித்து மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம். தொகுதி எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது, மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
அன்புமணி ராமதாஸின் பேச்சு: "அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. இணைந்து போட்டியிட உள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் விரோத, ஊழல் செய்கிற, சமூகநீதிக்கு எதிரான தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறோம். மிகப்பெரிய வெற்றியைப் பெற இருக்கிறோம்" என்று கூறினார்.
கூட்டணி பின்னணி: ராமதாஸ் மீதான நிபந்தனை?
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இந்த கூட்டணி கூடுதல் கவனம் பெற்றுள்ளது. ராமதாஸ் தரப்பை கூட்டணியில் ஏற்கக் கூடாது என்ற நிபந்தனையை அன்புமணி, எடப்பாடி பழனிசாமியிடம் முன்வைத்ததாகவும், அதற்குப் பழனிசாமியும் சம்மதம் தெரிவித்த பிறகே கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தொகுதி பங்கீடு குறித்து 15 இடங்கள் வரை அ.தி.மு.க. ஒதுக்கத் திட்டமிட்டதாகவும், அன்புமணி தரப்பு 20க்கும் மேற்பட்ட இடங்களைக் கோரியதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

LIVE 24 X 7