பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு தரப்பினரும் தொடர்ந்து மாறி மாறி ஆதரவாளர்களை நீக்கி வரும் நிலையில், தற்போது கட்சி நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேரை அதிரடியாக நீக்கியுள்ளார்.
தந்தை - மகன் மோதல்
பா.ம.க.வின் சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவை அன்புமணி ராமதாஸுக்குத் தான் சொந்தம் எனத் தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் அங்கீகரித்ததாகச் சொல்லப்படும் நிலையில், இதனை டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்த உட்கட்சிப் பூசல் காரணமாக, இரு தரப்பிலிருந்தும் மாறி மாறி நிர்வாகிகள் நீக்கப்பட்டு, சேர்க்கப்பட்டு வருகின்றனர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த மோதல் தற்போது தீவிரமடைந்துள்ளது.
3 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம்
இந்தச் சூழலில், பா.ம.க.வின் நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜனவரி 12) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பா.ம.க.வில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களாகக் கருதப்படும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்சியில் இருந்து நீக்குவதாக அவர் அறிவித்துள்ளார்.
நீக்கப்பட்டவர்கள்: மயிலம் எம்எல்ஏ சிவக்குமார், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் மற்றும் தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன்.
கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் ராமதாஸ் இந்த ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இந்த அதிரடி நீக்கம் பா.ம.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7