இந்தநிலையில், சாலையில் திரண்டிருந்த கூட்டத்தில் முன் வரிசையில் நின்று கொண்டிருந்த சீலி சிங்கையா என்பவர் எதிர்பாராதவிதமாக ஜெகன்மோகன் ரெட்டி சென்று கொண்டிருந்த காரின் முன், நிலை தடுமாறி விழுந்துள்ளார். அவர் விழுந்ததை கவனிக்காத ஓட்டுநரும் உடனடியாக வாகனத்தை நிறுத்தாததால், காரின் முன்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது.
இதனைத்தொடர்ந்து அவர் அருகில் உள்ள அமருத்துவமணியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பலியான நபர் சீலி சிங்கையா (65) என்றும் அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தொண்டர் எனவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவரது மனைவி சீலி லூர்து மேரி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில், இந்தச் சம்பவத்தின் திகிலூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தில் இருந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, கார் ஓட்டுநர் ரமணா ரெட்டி, உதவியாளர் கே. நாகேஸ்வர ரெட்டி, முன்னாள் எம்.பி. ஒய்.வி. சுப்பா ரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னி நானி மற்றும் முன்னாள் அமைச்சர் விடதாலா ரஜினி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுநர் ரமணா ரெட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.
LIVE 24 X 7









