கர்நாடகாவில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நேர்ந்த சோகம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
4 பேர் பலி
கர்நாடகாவின் தும்குரு மாவட்டத்தில் உள்ள குனிகல் பைபாஸ் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.விபத்தில் உயிரிழந்தவர்கள் மாகடி தாலுகாவில் உள்ள மட்டிகெரே கிராமத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் சீபே கவுடா, அவரது மனைவி ஷோபா மற்றும் அவர்களது குழந்தைகள் டும்பிஸ்ரீ மற்றும் பானுகிரண் கவுடா என தெரியவந்துள்ளது.
தங்கள் மகனை பள்ளி விடுதியில் விட்டுச் செல்லச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மகடி நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த சீபே கவுடா, குனிகலின் புறநகரில் உள்ள பிடனகெரே அருகே உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் தனது மகன் பானுகிரன் கவுடாவை இறக்கிவிட வந்துள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்..
விடுமுறைக்காக குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமை மகடிக்குத் திரும்பியுள்ளனர். இரவு உணவுக்குப் பிறகு சிறுவனை விடுதியில் இறக்கிவிட ஒன்றாகப் பயணம் செய்துள்ளனர். அப்போது அவர்கள் குனிகல் பைபாஸை அடைந்தபோது, ஒருவழிப் பாதையில் தவறான பக்கத்திலிருந்து வேகமாக வந்த ஒரு லாரி அவர்களின் கார் மீது பயங்கரமாக மோதியது.
கார் மீது லாரி நேருக்கு நேர் மோதியதால் காரில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் கார் முற்றிலுமாகச் சிதைந்துள்ளது. சீபே கவுடாவுக்கு வர்ணஸ்ரீ, டும்பிஸ்ரீ மற்றும் பானுகிரண் ஆகிய மூன்று குழந்தைகள் இருந்தனர். வர்ணஸ்ரீ பெங்களூரில் உள்ள தயானந்த சாகர் கல்லூரியிலும், டும்பிஸ்ரீ பெங்களூரில் உள்ள குளோபல் கல்லூரியிலும் படித்து வந்தனர். முதலில் தங்கள் மூத்த மகள் வர்ணஸ்ரீயை பெங்களூருவில் இறக்கிவிட்டு, பின்னர் பானுகிரனை பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். விபத்து நடந்த நேரத்தில் சீபே கவுடா தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் காரை தானே ஓட்டிச் சென்றுள்ளார்.
போலீசார் விசாரணை
இந்த விபத்தில் 4 பேரும் உயிரிழந்த நிலையில், குனிகல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சாரணை மேற்கொண்டுள்ளனர்.

LIVE 24 X 7