பெங்களூருவை சேர்ந்த இந்த இளைஞர், அரியானாவில் உள்ள இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பயிற்சி விமானியாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி இண்டிகோ தலைமை அலுவலகத்தில் நடந்த ஒரு ஆலோசனையில் கலந்துகொண்டுள்ளார் .
அப்போது அவரது மூத்த அதிகாரிகளான, தபஸ் தே, மணீஷ் சாஹ்னி மற்றும் கேப்டன் ராகுல் பாட்டீல் ஆகியோர் அவரை சாதி ரீதியாக இழிவான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும், ‘நீ விமானம் இயக்க தகுதியற்றவன், போய் செருப்பு தைக்கும் தொழிலை செய்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த பயிற்சி விமானி, இண்டிகோ நிறுவனத்தின் உயரதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவரது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், சம்பளம் குறைக்கப்பட்டதாகவும் ஒரு கட்டத்தில் வேலையும் இழந்ததாகவும் பயிற்சி அந்த இளைஞர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பயிற்சி விமானி காவல் நிலையாயத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், “இண்டிகோ நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளான தபஸ் தே, மணீஷ் சாஹ்னி மற்றும் கேப்டன் ராகுல் பாட்டீல் ஆகியோர் மீது காவல் துறையினர் எஸ்சி\எஸ்டி (வன்கொடுமை தடுப்பு சட்டம்) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து மூத்த அதிகாரிகள் மற்றும் இண்டிகோ நிறுவனம் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. பயிற்சி விமானி சாதிய வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7









